கற்பித்தலால் ஆய பயனென்கொல்

ஆற்றலின் அளவே குதிரையென கற்பிக்கப்பட்டால்
வேகம் மட்டுமே கவனிக்கப்படும்.
குதிரை என்பது
வேகம் மட்டுமல்ல
அது ஒரு உயிர், ஒரு படைப்பு.

பந்தயங்கள் எல்லாம்
ஜெயிக்கும் குதிரைகளின் மேல்தான்
என்றால்,
தோற்கும் குதிரைகள்தானே
போற்றுதலுக்குரியவை?

 பசுக்கள் மட்டுமே புனிதமாய்
புகட்டப்பட்டால்
எருமைகள் எல்லாம் அகதிகளாய்அலையவேண்டியதுதான்.
( எருமைபாலை எவர்தலையில்
கொட்டுவது)

கனிகள் வேண்டிமட்டுமே
மரங்கள் வளர்க்கப்படுமாயின்
காற்றைக்கூட இனி
காசு கொடுத்துத்தான்
வாங்கவேண்டியிருக்கும்
மறுக்கமுடியாது.

 மந்தை ஆடுகளின்
வால்பற்றி அலையும் மனங்கள்
செரப்போவதேன்னவோ
கசாப்புக்கடைகளையே.
மறந்துவிடாதீர்கள்.

Comments

  1. அருமையா இருக்கு கவிதை !

    ReplyDelete
  2. கனிகள் வேண்டிமட்டுமே
    மரங்கள் வளர்க்கப்படுமாயின் .. அருமை!



    *பிழை(கள்) திருத்தவும்

    ReplyDelete

Post a Comment