Dr.போலிகள்



திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

இந்த வரிகள் கேட்பதற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதுதான் நிஜம். தவறு செய்பவர்கள் எவருமே தானாய் திருந்திவிடுவதில்லை. பொதுவாக கதைகளிலும் திரைப்படங்களிலும் வில்லன்களாக வரும் கதாபாத்திரம் திருந்துவதாய் காட்டினாலும் அதற்குள் இரண்டு கொலை ஒரு கற்பழிப்பு ஆள்கடத்தல் என பல அசம்பாவிதங்கள் நடந்துவிடுவதுண்டு இத்தனைக்கும்பின் அவர் திருந்திதான் என்ன சாதித்துவிடப்போகிறார். 

தமிழகத்தில் 50,000 போலி மருத்துவர்கள் தங்களின் பொன்னான சேவையால் நாட்டின் மக்கள்தொகையை கணீசமாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் (""தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால், உயிரிழப்புகள், நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது,'' என, அகில இந்திய மருத்துவ சங்க, தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.- தினமலர் 04-02-13) ஒத்துக்கொண்டுள்ளார். இப்படியான பகிரங்க அறிக்கைகள் அரசின் சுகாதாரத்துறையின் கேவலமான செயல்பாடுகளைத்தான் காட்டுகிறது. தான் இதுவரை பார்த்துவந்த மருத்துவர் உண்மையில் தகுதியானவரா அல்லது போலியா என்பதில் தொடங்கி இனிமேலாவது போலிகலிடம் சிக்காமல் எப்படி மீள்வது என்பதுவரை பொதுமக்களுக்குத்தான் எத்தனை மனப்போராடம். 

கடவுளைப்போல் கருதப்படும் மருத்துவர்களின் நம்பகத்தன்மைக்கு வெளிப்படையான ஆதாரங்களை தெரிவிக்கவேண்டும் என ஏதேனும் வரைமுறை இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் எங்குமே/எவருமே கடைபிடிப்ப‌தில்லையே ஏன்? கிராமப்புறங்களிலும், சிறிய டவுன்களிலும்தான் இந்த போலிடாக்டர்களின் ஆதிக்கம் அதிகம் எனக்கொள்ளலாம். மக்களின் அறியாமையும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பெருப்பாலும் இருப்பதே இல்லை என்ப‌தும்தான் போலிகளுக்கு ஏதுவானதாக இருக்கிறது. நகர் புற‌ங்களில் போலிகள் குறைவுதான் என்றாலும் தனியார் மருத்துவமனைகளில் இரவு மற்றும் மதிய வேளைகளில் டூட்டி டாக்டர்கள் சந்தேகத்துக்குரியவர்களே.

தையலர்கள், மெக்கானிக்குகள் என மக்களின் சேவைதொடர்பான வேலைகளை செய்துபிழைக்கும் சிறுதொழிலாளிகள் தாங்கல் அந்த தொழிலுக்கு தகுதியானவர்கள்தான் என்பதை தெரிவிக்கும் வண்ணம் அரசு வழங்கும் சான்றிதழை மக்கள்பார்வையில் படும்படி வைத்திருக்கவேண்டும் என்ப‌துபோல் மருத்துவர்களும் தங்கள் சான்றிதழை தங்கள் பணியிடங்களில் கட்டாயம் வைத்திருக்கவேண்டும், குறைந்தபட்சம் பிரிஸ்கிரிப்ஷன் எனும் மருந்து எழுதிக்கொடுக்கும் சீட்டில் மருத்துவ கழகத்தால் அங்கிகரிக்கப்பட்ட அவரின் பதிவு எண்னாவது இருக்கவேண்டும் என சட்டம் இயற்றவேண்டும். 

இந்த போலிகள் தானாய் திருந்துவதற்குள் பல உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும். இவ்வாறான தவறுகள் தடுக்கப்படவேண்டுமானால் கடுமையான சட்டங்கள் மட்டுமே உதவும். கடுமையான சட்டங்கள் தவறு செய்யநினைப்பவர்கள் மனதில் பயத்தை விளைவிக்கும் எனபதுதான் உண்மை. அரபு நாடுகளில் தண்டனை சட்டம் அங்கே பெருமளவு தவறுகளை தடுத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. கூடவே அந்த சட்டங்கள் பற்றிய தெளிவை மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதும் கவனிக்கப்படவேண்டுய ஒன்று.



Comments

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு! இங்கேயும் வந்துட்டாரா இந்த தமிழ்மகன்! இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே?

    ReplyDelete

Post a Comment