பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு!


என்னிக்காவது மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கும்போது சாப்பாடு ஓட்டல்தான், ஆனா அந்த ஒருநாள் வெளிய சாப்பிட எவ்வளவோ யோசிக்கவேண்டும். ஏன்னா ஒர் சாதாரணா சைவ உணவகத்தில் காலை ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு காப்பி விலை 50 ரூபாய். மதியம் ஒரு சாதா மீல்ஸ் 55 முதல் 65 வரை அதுபோலவே இரவுக்கும் கணக்கு பாத்தால் குறைந்தபட்சம் 150 ரூபாய் செலவழிக்கவேண்டியுள்ளது. இதே உயர்தர சைவ உணவகம்னா கேட்கவே தெவையில்லை 250 ரூ எகிரிடும். இந்த நிலையில் 1 இட்லி 1 ரூ, சாம்பார் சாதம் 5 ரூ, தயிசாதம் 3 ரூ என்று அரசு அறிவித்திருப்பது காதினில் தேன் பாய்ந்தாற்போல் இருக்குது 

சென்னையில் 1000 அரசு உணவகங்கள் தொடங்கப்படவுள்ளதாய் அறிவித்திருக்கிறது அரசு. இது ஏழைகளுக்கும், கூலித்தொழிலாலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கப்போகிறது என்று எல்லா பட்சிகளும் பறந்துபறந்து கூவுகின்றன. அதேநேரம் பாராளூமன்ற தேர்தலே இதற்கு கார‌ணம் என சில அரசியல் பருந்துகள் ஆரோகணிக்கின்றன. 

 கோயில்களில் அன்னதானம் போல் இதுவும் நல்ல திட்டம்தான் ஆனால் காலப்போக்கில் இதுவும் கவனிப்பாரற்ற சவளைக்குழந்தை ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். ஏற்கனவே அரசு ஏற்றுநடத்தும் சாராயக்கடைகளின் சுத்தம், மற்றும் சுகாதாரம் பற்றிய விவரங்கள் தமிழக குடிமகன்கள் அறிந்ததுதே. இத்திட்டமும் அதுபோல் மாறிவிடாமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் ஆசை. பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு என்பதுபோல் நல்லதிட்டம் சரியான கவனிப்பும் செயல்திட்டமும் இல்லாமல் நாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அரசின் கடமை.

இத்திட்டத்திற்கான அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சலுகை விலையில் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் முதல்வர். முதல்கட்டமாக வார்டுக்கு ஒன்று என முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆகையினால் ஒரு யோசனை: 
இது ஏழைகளுக்கான திட்டமாக இருந்தாலும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், மெம்பர்களும், அவர்களின் குடும்பமும் வாரத்தில் 2 நாட்கள் இந்த ஓட்டல்களில்தான் சாப்பிடவேண்டும் என்று சட்டம் போடப்படவேண்டும். அப்போதுதான் சுத்தமும் சுகாதாரமும் சுவையும் ஓரளவிற்காவது கடைபிடிக்கப்படும்.

எது எப்படியோ இத்தனை ஆண்டுகளாய் தொடரும் மதிய உணவு திட்டத்தால் தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றோர் சதவிகிதம் அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது. அதுபோல் இத்திட்டமும் மிக நீண்டகாலத்திற்குத்தொடர்ந்தால் குறைந்தபட்சம் பட்டினிச்சாவின் சதவிகிதமாவது குறையும். பசித்தவனுக்கு சோறு எல்லா பாவங்களுக்கும் மருந்து. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

Comments

  1. \\இது ஏழைகளுக்கான திட்டமாக இருந்தாலும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், மெம்பர்களும், அவர்களின் குடும்பமும் வாரத்தில் 2 நாட்கள் இந்த ஓட்டல்களில்தான் சாப்பிடவேண்டும்\\ அய்யய்யோ, கடையை நடத்துறவன் தலையில் துண்டு போட வேண்டியது தான்.

    அதுசரி இது சென்னையில் மட்டும் தானே? இதுவே 40 MP சீட்டும் ஜெயிக்க உதவுமா?

    ReplyDelete
    Replies
    1. MP சீட்டுக்கு உதவுதோ இல்லையோ எலக்க்ஷன் வரைக்குமாச்சும் ஏழைகளுக்கு உதவும்.

      Delete

Post a Comment