ராகுல் காந்தி - காங்ரஸ் பூந்திகளால் பிடிக்கப்பட்ட லட்டு.

அண்ட பகிரண்டமெல்லாம் தேடியலைந்தாலும் கிடைக்கமாடார் இப்படியொரு துணைத்தலைவர் காங்ரஸுக்கு 150 ஆண்டு வலிமையும் வரலாறும் கொண்ட கட்சியில் நேரு குடும்பத்து விளக்குகள் மட்டுமே அதிகாரக்கட்டிலில் குத்தவைக்கப்படுகின்றன. அவ்வகையில் ராகுலும் தற்போது துணைத்தைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் நியமிக்கப்படுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே? 

காங்ரஸில் தொண்டர்கள் குறைவு தலைவர்கள் அதிகம் என ஒரு பகடி நிலவுவது தெரிந்தவிஷயமே. ஆனால் தலமைக்கான தேர்வின்போதுமட்டும் அவர்கள் தொண்டராய்க்கூட இல்லாமல் அதையும்தாண்டி ஆட்டுமந்தைகளாய் மாறிவிடுவது அவலம். சரி ஒரு கட்சி தன் தலைமையை தேர்ந்தெடுப்பதில் நமக்கென்ன பிரச்சனை. அங்கேதான் பிரச்சனையே தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலும் இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது,ஆட்டிவைத்துக்கொண்டிருப்பது காங்ரஸ் கட்சிமட்டுமே அதற்கு மத்தியில் வலுவான எதிர்கட்சி இல்லாததும், இருக்கும் கட்சியும் மதஅடிப்படைவாதகட்சி என பெயரெடுத்ததுமே முக்கியகாரணங்கள். இந்நிலையில் நாம் கண்டுவந்த கனவுகளுக்கும் அனுபவித்துவரும் துர்கனவுகளுக்கும் காங்ரஸின் ஆட்சியும் கொள்கையுமே காரணமாக இருக்கிறது. இதுவரையான எந்த கொள்கையுமே சராசரி இந்தியனுக்கு சாதகமானதாகவோ,பயனளிக்கக்கூடியதாகவோ இல்லைஎன்பது நிதர்சனம். காங்ரஸ் ஆட்சி பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கும் மட்டுமேயான ஆட்சியாய்த்தான் இருந்திருக்கிறது. இந்நிலையில் எந்த ஒரு திடமான செயல்பாடுகளிலும் பங்கெடுக்காத, நாட்டின் எந்த ஒரு பிரச்சனைக்கும் எதிராய் குரல்கொடுக்காத வெறும் நேரு குடும்பம் என்ற ஒற்றை சாளரத்தின் வழிமட்டுமே முகம்காட்டிவந்த ராகுல் நேரடியாய் துணைத்தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது "கண்ணா லட்டுதின்ன ஆசையா" நாயகன் (ஹீ..  ஹீ...  3 வது நாயகன்)பவர்ஸ்டார் போலத்தான் தெரிகிறார். இனிவரும் காலங்களில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைகொண்டே அவரின் எதிகாலம் தெரியவரும். நம் தலையெழுத்தும்தான்.



Comments

  1. highlight of this congress MP sudarsana nachiappan wrote on Kumadam reporter describing this as " Purananoortu thai" - Sonia madam has sacrificed his son to the country-- shame shame puppy shame- ramabhadran

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment