புது(ஊ)மைப்பெண்


புனிதங்களை
போற்றிக்காக்கும் பொருட்டு
புரையோடிப்போன பழமைகளை
மூடிமறைத்தும்
முழுதாய் ஏற்றும்
சிலநேரங்களில் சுகமாயும்
பல நேரங்களில் சுமையாயும்
சுமக்கத்தான் செய்கிறேன் - கணவனை
கட்டிலில்.

கோபங்கள், வக்கிரங்கள்
அலட்டல்கள், ஆளுமைகள்
அனைத்தும் அவன்புற‌மிருக்க‌
என்னுடைய‌தான ஒருபக்கத்தை
ஏற்கவே ஆளிள்லா
பாழ்வெளி விசாரணையில்
தீர்ப்பு மட்டும் எப்போதும்
எனக்கெதிராய்.

பொங்கி எழுந்து
புதுவேகம்கொண்டால்
புனிதங்களை காக்கும்
பொருப்பாளி ஆக்கப்பட்டு
கூண்டுக்குள் அடைக்கப்படுகிறேன்.

Comments

  1. தலைப்பும் கவிதையும் நெஞ்சைத் தொட்டது.

    அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசித்தமைக்கும் நன்றி. பல காலமாகவே பெண்கள் நிலை இதுதான்.

      Delete
  2. என்னுடைய‌தான ஒருபக்கத்தை
    ஏற்கவே ஆளிள்லா
    பாழ்வெளி விசாரணையில்
    தீர்ப்பு மட்டும் எப்போதும்
    எனக்கெதிராய்.//

    அருமையான ஆழமான
    சிந்தனை.மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மறுவரவிற்கும் வாசிப்பிற்கும் நன்றி.

      Delete
  3. idanai kazhivirakkam endru solluvargal. Porrupalli endra porvaikkul iyalamaiai maraikirargal pengal.

    I am not a male chavanist But nowadays I frustrate because these are Bharathi Pudumai Penn.
    Even they could not handle their own Mother in Law and children how can they handle other situation.

    Only in Human species Men are going to bread earning. Acting with so many castings. Women are from Venus. they are not so flexible.

    Sorry this is reality.

    ReplyDelete

Post a Comment