சன்னலுக்கு வெளியே



வெயில் தாழ்ந்த கிணற்றடியில்
சிதறிக்கிடக்கும் பறுக்கைகளை
கொரித்துப்போகும் அனில்கள்.

குழந்தையின் விருப்பத்திற்காய்
வாங்கிய தொட்டிக்குள்
விருப்பமேயில்லாமல்
அலைந்துகொண்டிருக்கும்
மீன்கள்.

மறைக்கமறந்த எதையும்
திருடக்காத்திருக்கும்
பூனைகள்.

வாசல்தாண்டி
வந்ததே இல்லாத‌
விசுவாசம்மிக்க நாய்கள்.


முருங்கைப் பட்டையில்
அடை அடையாய்
முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும்
கம்பளிப் பூச்சிகள்.

எல்லாம் விற்று வெளியேறி
இரண்டாம் தளத்தில் குடியேறி
ஓய்ந்த ஓர் பொழுதில்
சன்னல் வழி பார்க்கையில் 
இல்லை அவை.

Comments

  1. முன்னர் சொல்லிபோன அற்பமான
    விஷயங்களாகப் பட்டவைகள்யெல்லாம்
    இறுதிப் பத்தியைப் படித்ததும்
    இதயத்தை என்னவோ பண்ணிப்போகிறது
    அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. good one . hope the writing is more continue to write

    ReplyDelete

Post a Comment